6:38 PM |
உரிமை முழக்கம்
 


எகிப்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முற்சி அவர்களின் தலைமையிலான அரசாங்கம் தற்போது இராணுவத்தின் சதி திட்டங்களுக்கு பின்னால், ஊடகங்களின் பொய் பரப்புதல்களுக்கு பின்னால் அநியாயமாக கவிழ்க்கப்பட்டு இராணுவ தளபதி சிசி என்ற சர்வ...ாதிகாரியின் ஆட்சி நடந்து வருகிறது.

உலகில் என்ன பிரச்சினை நடந்தாலும் தன் நீண்ட மூக்கினை நுழைக்கும் அமேரிக்கா, தொட்டில் குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்ட முன் வந்து நின்றது வேடிக்கையே.

என்னோடு பனி புரியும் எனதருமை எகிப்திய நண்பர்கள் இதனை மிகப்பெரும் சதியாகவே கருதுகிறார்கள்.

இராணுவத்தின் அட்டூழியங்களை எதிர்த்து எகிப்திய வீதிகளில் மக்கள் இன்றும் முழக்கமிட்ட வண்ணம் உள்ளனர். குறிப்பாக பெண்கள், அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவிகள். அச்சுறுத்தல்கள் பல வந்த போதிலும் ஒரு நாளும் இவர்கள் நிறுத்தவில்லை தங்களின் முழக்கங்களை.

இவர்கள் உள்ளத்தில் கொண்டிருப்பது ஏகத்துவ கொள்கை அல்லவா. வாழ்வின் இலட்சியம் மறுமை அல்லவா.

போராட்டங்களில் இவர்கள் கொண்டிருந்த உறுதி அரசின் கண்களையே உறுத்தியது. இறுதியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். போராட்ட களத்தில் பெண்கள் பகுதியை முன்னின்று வழி நடத்தியவர்கள் என 21 பெண்கள் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் அதிகமானோர் 20 வயதை கடந்திருக்கவில்லை.

இவர்களின் போராட்டம் நம் ஊரில் நடப்பது போல் ஒரு நாள் அடையாள போராட்டமல்ல. காலையில் ஆர்பாட்டம் நடத்தி, மதியம் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை ஆவதற்கு, இவர்களின் போராட்டம் வருடம் ஆனாலும் தொடரலாம்..... ஆனால் முழக்கங்கள் ஓயப்போவதில்லை.

சர்வதிகார இராணுவ அரசாங்கத்தின் கையில் இருக்கும் நீதி மன்றம் இவர்களின் வழக்கை விசாரித்து 11 ஆண்டுகள் தண்டனை விதித்தது. ஆனால் உலகெங்கிலும் எழுந்த எதிர்ப்பின் காரணமாக இவர்கள் அனைவரும் சமீபத்தில் விடுதலை அடைந்தார்கள்.

விடுதலைக்கு பின்னர் அந்த புரட்சி பெண்களிடத்தில் அவர்களின் விடுதலை பற்றிய வினா தொடுக்கப்பட்டது.

அப்போது அவர்கள் கூறியது இதுதான்; "கை விலங்குகளும் கடுமையான சிறைச்சாலைகளும் ஒரு நாளும் எங்களின் உரிமை முழக்கங்களை நிறுத்தப்போவதில்லை. எங்கள் போராட்டம் தொடரும், விடியல் ஒருநாள் பிறக்கும்"

இவர்களின் பதில் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது அல்லவா ? ஆம் சகோதர சகோதரிகளே, இஸ்லாம் என்ற அந்த தூய மார்க்கம் நம் உள்ளத்தில் ஊறிப்போனால் இவ்வுலகம் நமக்கு ஒரு பொருட்டே அல்ல. மறுமையில் இலட்சியத்தை அடைய துடிக்கும் நமக்கு இவ்வுலகில் எந்த தடைகளையும் தாண்டும் தைரியத்தை கொடுப்பது வல்ல இறைவனின் வேதம் மட்டுமே.

எகிப்திய மக்களின் உரிமை முழக்கங்கள் வெற்றி பெற மனதார பிரார்த்திப்போம். இந்த பெண்களை முன்மாதிரிகளாக நம் பெண் மக்களிடத்தில் அறிமுகம் செய்திடுவோம்.

-உமரின் தந்தை -

Read more…